பொதுவாக காவல்துறையில் இருப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள், இல்லையென்றால் மேலதிகாரிகளின் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள் இதுதான் வழக்கமான ஒன்று.
ஆனால் இங்கே சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரான் வீதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வீரசேகரன் (30) இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வீரசேகரனுக்கு கவிப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தற்சமயம் கவிப்பிரியா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். என்ற 15 தினங்களுக்கு முன்னர் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது இதன் காரணமாக கோபத்தில் மனைவி கவி பிரியா உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்று விட்டதால் மன உளைச்சலில் இருந்த வீரசேகரன் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கவனித்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வீரசேகரனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டார்.இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன இந்த சம்பவம் அந்த பதில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.