fbpx

இந்து முன்னணி நிர்வாகி அதிரடி கைது…..! கோவையில் பரபரப்பு நடந்தது என்ன….?

கோவையில் சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு, கார் குண்டுவெடிப்பு என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.

அந்த விதத்தில் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ராய்வி என்ற நபர் வீட்டில் கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை அவர் சட்ட விரோதமாக வைத்திருக்கிறார் என்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன் பேரில் காவல்துறையினர் திடீரென்று அவர் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இந்த அயோத்தி ரவி இந்து முன்னணியில் மாவட்ட துணை தலைவராக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரையில் இருந்ததாக கூறப்படுகிறது.

புளியங்குளம் பகுதியில் இருக்கின்ற அயோத்தி ராவியின் வீட்டில் மாநகர துணை காவல் ஆணையர் சந்தீப் தலைமையில் தனி படை காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரு கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கை துப்பாக்கிகளுக்கு சரியான உரிமம் இல்லாதது காவல்துறையினரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 கை துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அயோத்தி ரவியை போத்தனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

கொரோனா பரவல் இல்லை.. ஆனாலும் லாக்டவுன் போட்ட வடகொரிய அதிபர்.. என்ன காரணம் தெரியுமா..?

Wed Mar 29 , 2023
வடகொரியாவில் ராணுவ நிகழ்ச்சியின் போது போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதை அடுத்து, ஒட்டுமொத்த நகரிலும் லாக்டவுன் விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்… வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல விசித்திரமான சட்டங்களும், விதிகளும் நடைமுறை உள்ளன.. இந்நிலையில் வடகொரியாவில் உள்ள ஹைசன் நகரில் […]

You May Like