fbpx

அதிமுகவின் 8வது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி….! அரசியல் தலைவர்கள் வாழ்த்து….!

அதிமுகவின் 8வது பொதுச்செயலாளராக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கின்ற வாழ்த்து செய்தியில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல கொங்கு மண்டல தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள் தெரிவித்து இருக்கின்ற வாழ்த்து செய்தியில் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் தமிழகத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் எதிர்காலம் இவற்றை மட்டுமே மனதில் வைத்து ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு பழனிச்சாமிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பு அதிமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத்திற்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை அனுப்புவதற்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

இதே போல மத்திய இணை அமைச்சர் எல் முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் தொலைபேசியின் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போன்றோரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Post

அதிர்ச்சி..!! ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்..!! விவரங்கள் உள்ளே..!!

Wed Mar 29 , 2023
ஆன்லைனில் யுபிஐ மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட […]

You May Like