பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. மணிரத்தினம் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி என்று பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலிருந்து வெளியான கிலிம்ஸ் டீசர் வீடியோ தற்சமயம் வெளியாகி இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபீசிலும் சாதனை நிகழ்த்தியது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2வது பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகியுள்ளது இந்த வெளியீட்டு தேதி தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் அவை யாவும் உண்மையில்லை என்று அதன் பிறகு தெரியவந்தது.
இந்த சூழ்நிலையில், ஜெயம்ரவி, விக்ரம் மற்றும் கார்த்திக் உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கிலிம்ஸ் வீடியோ ஒன்றை தயாரிக்கும் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.