fbpx

மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த முன்னுரிமை; தமிழக அரசு அரசாணை..!

மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தெருவோர தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதி இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், இந்த திட்டத்தை தற்போதைய நிதி ஆண்டிலேயே தொடர்ந்திட உரிய ஆணை வழங்க இந்த அரசாணை தெரிவித்துள்ளது.

சாலை ஓரங்களில் மாற்றுத்திறனாளிகள் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு மண்டல, வார்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை இருக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மாற்றுத்திரனாளிகளின் வீட்டிற்கு அருகில், விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமையை இந்த அரசாணை அளித்துள்ளது.

Rupa

Next Post

வரும் 31-ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்.. இல்லையெனில் விவசாயிகளுக்கு ரூ.2000 கிடைக்காது..

Sat Aug 27 , 2022
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு […]
PM-Kisan..!! விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

You May Like