விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லைய நாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை (33) என்பவர் இவருடைய முதல் மனைவி இவரிடமிருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டதால் இவர் சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 11 மாதத்தில் அபிநயா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்சமயம் வர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இத்தகைய நிலையில், வர்ஷினியின் மாமனார் கருப்புசாமி, மாமியார் சோலையம்மாள் உள்ளிட்ட இருவரும் அடிக்கடி வர்ஷினியை வசைப்பாடி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான வர்ஷினி என்னுடைய மரணத்திற்கு மாமனார் மற்றும் மாமியார் தான் காரணம் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை பார்த்து அதிர்ந்து போன கணவர் உத்தண்டுகாளை வீட்டிற்கு விரைந்து வந்து தன்னுடைய மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வர்ஷினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.