இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்கிறது. அதேபோல ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தை அமெரிக்கா நடத்த உள்ளது, ஜி 7 உச்சி மாநாட்டை ஜப்பான் நடத்த உள்ளது.
குவாட் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை ஏற்று இருக்கின்ற சூழ்நிலையில், இது உலக நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய நெருக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டொனால்ட் லூ வழங்கிய பேட்டி ஒன்றில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோவைடன் வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார் என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் அதிபராக முதல்முறையாக பொறுப்பேற்ற போதே இந்தியா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜோபைடனை வாழ்த்தியதோடு இந்தியாவிற்கு தாங்கள் நிச்சயம் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.