fbpx

தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து தாக்கும்.. சைக்கோ வாலிபர் கைது…!

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கிராமத்தில் கிழக்கு தெருவை வசித்து வருபவர் கோபால். இவர் கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (48). இவர் இன்று காலை தனது குழந்தையை பள்ளியில் கொண்டு விட்டு விட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அதே கிராமத்தில் வசித்து வரும் சுருளீஸ்வரன் (32) என்பவர், சரஸ்வதியின் வீட்டிற்குள் நுழைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி சுருளீஸ்வரனை வெளியே போகுமாறு கூறியுள்ளார். ஆனால் சுருளீஸ்வரன் சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சுருளீஸ்வரன் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் அடித்துவிட்டு ஓடி விட்டார்.

இதை பார்த்த, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சரஸ்வதியை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த பாண்டியன் நகர் காவல் துறையினர் பெரிய பேராலி கிராமத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரஸ்வதி வீட்டுக்கு செல்லும் பொழுது வழியில் சுருளீஸ்வரன் வேறொரு பெண்ணையும் தாக்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், கிராமத்தில் இருந்த சுருளீஸ்வரனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பேராலி கிராமத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

#Leave: பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கி‌ அரசு உத்தரவிட்டுள்ளது...! இந்த மாவட்டத்தில் மட்டும் தான்...

Thu Jul 28 , 2022
சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு இன்று நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு இன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஒரு நாள் […]

You May Like