fbpx

பள்ளி மாணவர்களிடையே மோதல்; தடுக்கச் சென்றவர்கள் தலை தெரிக்க ஓடிய பரிதாபம்..!

திருப்பூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற பொது மக்களை மிரட்டி அடித்தா மாணவர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில், குமார் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும். சென்ற ஒரு வாரமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று இரண்டு பள்ளி மாணவர்களும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மாறி மாறி இரு பள்ளி மாணவர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால், அங்கிருந்து சிலர் இந்த தாக்குதல் தடுக்க சென்றனர். இதை தொடர்ந்து மாணவர்கள் தாக்குதலை தடுக்க சென்றவர்களையும் கற்களை வீசி விரட்டியெடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு சென்று மோதல் ஈடுபட்ட இரண்டு பள்ளிகளை சேர்ந்த, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Baskar

Next Post

பொதுமக்களிடம் கருத்து கேட்பு; மாநில கல்விக் கொள்கை, குழு தலைவர் முருகேசன் அறிவிப்பு...!

Wed Jul 13 , 2022
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை உருவாக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பல நிலை பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் போன்ற பத்து […]

You May Like