முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மான த்தின் விவரங்கள் வருமாறு,
வரும் ஜூன் மாதம் 3ம் தேதி மதச்சார்பற்ற தற்போது கூட்டணியின் தலைவர்கள் பங்குபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வட சென்னையில் நடைபெற உள்ளது.
ஜூன் மாதம் 20ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்து சிறப்பிக்க இருக்கிறார். இந்த விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் தேதி ஆரம்பித்து 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வரையில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.