fbpx

மாமியாரின் குடும்பத்தாரால் அடித்தே கொலை செய்யப்பட்ட இளைஞர்…..! மத்திய பிரதேசத்தில் பரபரப்பு….!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர ஷைனி என்பவருக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அம்ரீன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2021 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இருவரும் ஜெய்பூரில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து அம்ரீன் மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார் அதன் பிறகு அவர் ஜெய்பூருக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனைவியை அழைத்துச் செல்வதற்காக ராஜேந்திரசைனி மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார். மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்த சமயத்தில் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அம்ரீனின் தாய் மற்றும் சகோதரன் உள்ளிட்டோர ராஜேந்திர ஷைனியை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜேந்திர ஷைனி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். ஆனால் உடலில் வெளி காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், ராஜேந்திராவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இத்தகைய நினைவில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அம்ரீனின் தாய் மற்றும் சகோதரன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

காதலியின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி டார்ச்சர்…..! காதலன் அதிரடி கைது குஜராத்தில் பயங்கர சம்பவம்…..!

Fri May 19 , 2023
குஜராத் மாநிலம் சூரத்தில் பெண் ஒருவரை அவருடைய காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளது. சூரத்தைச் சேர்ந்த நிகுன்ஞ்குமார் அம்ரித்பாய்பட்டேல் என்பவர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அம்ரித்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like