fbpx

ராமஜெயம் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…..! சிக்குவாரா. அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ…..?

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி தமிழகமே பரபரப்பாக பேசிக்கொண்ட ஒரு நிகழ்வு தற்போதைய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை சம்பவம். அன்று தன்னுடைய வீட்டில் இருந்து நடை பயிற்சிக்கு சென்ற அவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அப்போது இவருடைய கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கியது. இந்த சம்பவம் குறித்து திருச்சி தில்லை நகர் காவல் துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஆனாலும் பல்வேறு வழக்குகளை சாதுரியமாக கையாண்டு அந்த வழக்குகளை முடித்து வைத்த சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை பல ஆண்டுகளை கடந்து விசாரித்தும் இந்த வழக்கில் குற்றவாளிகளின் நிழலை கூட நெருங்க முடியவில்லை. ஆகவே இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் ராமஜெயம் கொலை நடைபெற்ற அன்றைய தினம் திருச்சியில் முகாமிட்டிருந்த 20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையை சிறப்பு புலனாய்வு குழு நடத்தியது. கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் 4 பேர் வீதம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து வருகை புரிந்த மத்திய தடயவியல் துறை நிபுணர்கள் 12 பேரிடமும் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு பதில் பெற்றனர். ஆனாலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பரமேஸ்வரி தம்பி ராஜா, அவருடைய மனைவி கிருஷ்ணவேணி மற்றும் ஒரு சிலரை திடீரென்று காவல்துறையினர் விசாரித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அதே விதத்தில் 2 பேரை புல்லட் ராஜா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருக்கிறார். இந்த 2 சம்பவத்திலும் கொலை செய்யப்பட்டவர்களின் கைகள் கம்பியால் கட்டப்பட்டு இருந்தனர். இது ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதத்தில் உள்ளதால் புல்லட் ராஜாவையும் மற்றவர்களையும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Next Post

‘மோடியின் அர்த்தத்தை இப்படி மாற்றுங்கள்...’ : ராகுல் காந்தியின் தண்டனைக்கு பிறகு குஷ்புவின் பழைய ட்வீட் வைரல்...

Sat Mar 25 , 2023
2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று […]

You May Like