தற்போதைய இளம் பெண்கள் மனதை மயக்கும் விதமாக இளைஞர்கள் பேசிவிட்டால் போதும் உடனடியாக அவர்களிடம் மயங்கி விடுகிறார்கள். அதன் பிறகு ஏற்படும் துன்பத்தை அவர்கள் மட்டும் அனுபவிப்பதில்லை. மாறாக அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து அனுபவிக்கும் அவலம் ஏற்பட்டு விடுகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மைக்குடியை சேர்ந்தவர் அஜித் (26) இவர் ஒரு 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதற்கு ஒரு நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில், கடந்த 9ம் தேதி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருமங்கலம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அஜித்தை தேடி வருகின்றனர்.
அதேபோல திருமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்( 21) என்ற நபர் 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இவர் சென்ற 6ம் தேதி அந்த மாணவி பள்ளி ஆண்டு விழாவிற்கு சென்ற போது அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக, மனமுடைந்த அந்த சிறுமி, கிருமி நாசினியை குடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கார்த்திக்கு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.