சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (39). இவர் வியாசர்பாடி மேற்கு ஆவணி பகுதியில் இருக்கின்ற ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 30ஆம் தேதி இரவு அங்கு பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பிரபாகரன் கத்தியை காட்டி மிரட்டி இலவசமாக பெட்ரோல் போடச் சொல்லி இருக்கிறார். ஆனால் பிரபாகரன் மறுத்துவிட்டார் ஆகவே அந்த நபர் பிரபாகரனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியதாக வியாசர்பாடி பிவி காலணியைச் சேர்ந்த ருகேஸ்வரன் (21) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 4 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.