தென்னிந்தியாவை கடந்து தற்சமயம் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவருடைய நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வருகின்ற நிலையில், குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க பாலிவுட் திரை உலகில் தொடர்ந்து 4 திரைப்படங்களுக்கும் மேல் அவர் ஒப்பந்தமாகி இருக்கின்றார்.
அதில் முதலாவதாக ராஜ் மற்றும் டி கே உள்ளிட்டோர் இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரியஸில் நடிக்க இருக்கின்றார் இந்த சீரிஸ்க்காக கடுமையான பயிற்சிகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார்.

சமீபத்தில் கூட சண்டை பயிற்சியின்போது கைகளில் உண்டான காயங்களின் புகைப்படங்கள் சமந்தா அவர்களால் வெளியிடப்பட்டது. சமந்தாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகும்.
அந்த விதத்தில் தற்சமயம் அவர் கல்லூரி பருவத்தில் தன்னுடைய தோழிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.