கடந்த 1994 ஆம் வருடம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படம் திரையரங்குகளில் கொடி கட்டி பறந்தது. சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க, குஷ்பூ, மீனா, விஜயகுமார், பொன்னம்பலம் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த பட குழு எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்த இந்த திரைப்படம் முழுமையாக 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சரத்குமார் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அந்த திரைப்படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய சரத்குமார் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிப்பதற்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.