கடந்த வாரம் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை பின்பு புயலாக உருவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. அதோடு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது.
இந்த புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, பல முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான அணைக்கட்டுகள் நிரம்ப தொடங்கினர்.இதனை தொடர்ந்து, கடந்த 9ம் தேதி இந்த மாண்டஸ் புயல் சின்னம் நள்ளிரவில் கரையை கடந்தது. ஆனாலும் தமிழகத்தில் பரவலாக இன்று வரையிலும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில்தான் இன்று மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. இந்த மழையின் காரணமாக, இன்று காஞ்சிபுரம் தாலுகாவில் இருக்கின்ற பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.
அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, திருவள்ளூர் ஊத்துக்கோட்டை வட்டத்தில் இருக்கின்ற பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் பி ஜான் வர்கீஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.