நடிகை ஆலியா மானசா சின்னத்திரையில் உள்ள சீரியல்களில் நடிக்கும் நடிகைகளிலேயே டாப்பில் இருக்கின்றார். திருமணமாகி 2️ குழந்தைகள் பெற்ற பின்னரும் கூட இவருடைய மார்க்கெட் குறையவில்லை.
இன்ஸ்டாகிராமில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தாலும் கூட அதிக அளவில் விருப்பங்கள் கிடைக்கிறது. சமீபத்தில் இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தார் அவர் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் வேண்டிக் கொண்டார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் நடிகை ஆல்யா மானசா ஒரு பாடலுக்கு ரீல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கால் சரியாகி விட்டதா இருந்தாலும் பார்த்து நடனம் ஆடுங்கள் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.