fbpx

நாமக்கல் அருகே குடிசைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…..! காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு……!

பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் சரளைமேடு என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துசாமி. இவர் அந்த பகுதியில் வெள்ளம் உற்பத்தி செய்யும் ஆளை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருடைய ஆலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி இரவு ஆளை அருகே உள்ள குடிசையில் வட மாநில தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் சிலர் அந்த குடிசைக்கு தீ வைத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் ராகேஷ் (19) சதிஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம்( 20), யஷ்வந்த் (19) மற்றும் கோகுல்( 24) உள்ளிட்ட நான்கு பேர் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 15 இடங்களில் காவல்துறையினரின் தரப்பில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு சாலை சந்திப்பு போன்ற சுற்றுவட்டார பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தீ வைக்கப்பட்ட குடிசையை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அதோடு, ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 800 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தெரிவித்ததாவது, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரத்தில் 20 இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கலாச்சாராயம் விற்பனை குறித்து மேற்கு மண்டலத்தில் இருக்கின்ற கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு மேற்கு மண்டலத்தில் கலாச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Next Post

தமிழ்நாட்டில் கொளுத்தி எடுக்கும் வெயில்..!! இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கும்..?

Tue May 16 , 2023
தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது. இதனால் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 18 பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியது. கிருஷ்ணகிரி, வேலூர் பகுதிகளில் உச்சபட்சமாக 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கரூர் […]

You May Like