fbpx

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா… மீசை வளர்க்கும் இளம் பெண்..!

கேரளா மாநிலம் கண்ணூர் சோலையாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜா (34). இவர் சிறுமியாக இருக்கும் போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்துள்ளது. அப்போது இவரை பார்ப்பவர்கள், அவரின் முகத்தில் உள்ள முடியை பார்த்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். அப்போது அவர் மிகவும் மன வேதனையுடன் இருப்பாராம். பிறகு இவருக்கு அதுவே பழகிவிட்டது. எனவே அதை அவருக்கு பிளஸ் பாயிண்டாக மாற் முடிவு செய்தார்.

எனவே ஷைஜா மீசை வளர்க்க முடிவு செய்தார். இந்த நிலையில் இவருக்கு பாலக்காடை சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடந்தது அவரது கணவரும் நீ மீசை வளர்ப்பதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளார். லட்சுமணன் பாலக்காட்டு பகுதியில் வயரிங் வேலை செய்து வருகிறார். இப்போது இந்த பகுதியில் உள்ள பெண்கள் கூட ஷைஜா வளர்க்கும் மீசையை கண்டு புகழ்ந்து வருகின்றனர்.

ஷைஜா மீசை வளர்ப்பதற்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். கேலி பேசிய ஆண்களும் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் ஷைஜா திருப்பூர் நகரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை இப்போது இந்த பகுதியில் உள்ளவர்கள் மீசை ஷைஜா என கூறி அழைத்து வருகின்றனர்.

Rupa

Next Post

100 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.. பூமியை நெருங்கும் பிரம்மாண்ட விண்கல்.. ஆபத்தானதா..?

Sat Jul 16 , 2022
பூமிக்கு அருகாமையில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் இருந்தாலும், அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லை.. ஏனெனில் அவை சூரியனில் இருந்து […]

You May Like