fbpx

நீங்கள் அமைத்த படிகளில் ஏறி வெற்றி பெற்றேன்: மு.க.ஸ்டாலின் உருக்கம்..!

தி.மு.க தலைவராக பொறுப்பேற்று  4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்று 5 ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்வுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-

தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் – நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Rupa

Next Post

ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்க, எழுதவே முடியாத பேனா சின்னம் எதற்கு?!: எடப்பாடியின் எகத்தாளம்..!

Sun Aug 28 , 2022
திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டத்தில், தொண்டர்களுக்கு மத்தியில் எதிர்கட்சிதலைவரான எடப்பாடி பழனிசாமி உரயாற்றினார். முதலஅமைச்சராக இருந்த கருணாநிதிக்கு  நினைவு மண்டபம் கட்டுவதை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை, அப்படி கூறவும் மாட்டோம். தற்போது தமிழக அரசு பல்வேறு பணிகளை செயல்படுத்த போதிய நிதி இல்லாமல் தள்ளாடி வருகிறது. போதுமான நிதி இல்லாத இந்த சூழ்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில்,  ரூ.80 கோடிக்கு எழுத முடியாத பேனா நினைவு சின்னம் அமைப்பது […]

You May Like