நாட்டில் கந்துவட்டிக் கொடுமை அதிகரித்திருக்கிறது. இந்த கந்துவட்டியால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றனர். மேலும் பல குடும்பங்கள் என்ன ஆனது என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய் இருக்கிறது.
மேலும் பல குடும்பங்கள் இந்த கந்து வட்டி கொடுமைக்கு பயந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் கோபால எடுத்துள்ள பைரகர் காலன் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர், இவர் தனியார் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய வீட்டில் கிஷோர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.
அதோடு தற்கொலைக்கு முயற்சித்த கிஷோர் மற்றும் அவருடைய மனைவி, குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஐவரையும் அக்கம், பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து, இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், கிஷோர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை தொடர்பாக தங்களுடைய விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிஷோர் உட்பட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனையடுத்து காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை ஆரம்பித்தனர். அதோடு, கிஷோரின் கைபேசி போன்ற பொருட்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒப்பந்த பணிகளுக்காக அதிக அளவில் கடன் வாங்கியதாலும், கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் கிஷோர் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் எனவும், காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கட்ட விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.