விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கி இருக்கிறது. தற்சமயம் பலரும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக இருந்து வருகிறார்கள். தெலுங்கு, ஹிந்தி என்று மற்ற மொழிகளிலும் பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து பாடி வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் நடத்தும் கச்சேரிகளிலும் அதிகமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பாடகர்கள் தான் இடம்பெறுகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நபர்களில் ஒருவர் தான் பிரகதி குருபிரசாத். இவர் சிறுவர்களுக்கான சீசனில் பாடி பிரபலமானவர்.
எப்போதும் instagramல் ஆக்டிவாக புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிடும் இவர், தற்சமயம் ஒரு புதிய காரின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் புதிய காரின் முன்பு பிரகதி புகைப்படம் எடுத்து, அதனை பதிவிட்டு நான் வாங்கிய பெரிய முதல் பொருள் நிறைய சொல்ல வேண்டும் ஆனால் தற்போது எமோஷனலாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.