fbpx

மாமனாரின் பாலியல் வெறிக்கு பலியான துணை நடிகை: போலீசில் பரபரப்பு புகார்…!

துணை நடிகை ஒருவர், தன்னுடைய மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு மற்றும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கெருங்கம்பாக்கம், பாலகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர், நிவேதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துணை நடிகையாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் பேரன்பு போன்ற சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இவர் மாங்காடு காவல் நிலையத்தில் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார் மீது புகார் அளித்துள்ளதுள்ளார். மேலும் காவல்துறையினர் இது பற்றி துணை நடிகையின் மாமனார் -மாமியாரிடம் விசாரிக்க சென்றபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். எனவே காவல்துறையினர் அவர்களை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.

துணை நடிகை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது, அவர் ஒரு நடிகையாக இருப்பதால் அவருடைய மாமனார் சரவணவேல் மற்றும் மாமியார் சாந்தி ஆகியோர் தன்னை மதிப்பதில்லை என்றும். பலமுறை நீ ஒரு நடிகை தானே என கேட்டு மாமனார் அவரிடம் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பலமுறை இது பற்றி காவல்துறையிடம் புகார் கொடுத்த போதும், அவருடைய மாமியாரின் நெருங்கிய உறவினர் ஒருவர் காவல் துறையில் மிக உயரிய பதவியில் இருப்பதால் தன்னுடைய புகார் மனுவை நிராகரித்ததாகவும். சில தினங்களுக்கு முன்பு கூட தன்னுடைய மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், பெரிய மரக்கட்டையால் தன் மீது கொலவெறி தாக்குதல் நடத்தினார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

Rupa

Next Post

இத்தாலியில் வரலாறு காணாத கடும் வறட்சி காரணமாக, அவசரநிலை பிரகடனம்...!

Wed Jul 6 , 2022
இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஐந்து பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் கடுமையான வெயில் அங்குள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடுமையான வெயிலின் காரணமாக காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சியை அந்த நாடு சந்தித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. […]

You May Like