fbpx

பொதுக்குழு கூட்டம் செல்லும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ்…..! தரப்பு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்…..!

சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து அதிரடியாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் கொண்டு அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், இது தொடர்பான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதாவது ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதோடு, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தீர்ப்பின் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக கம்பீரமாக நிற்பதால் அவருடைய ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அவருடைய படத்திற்கு தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்.

மேலும் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கியிருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆகவே பன்னீர்செல்வம் தரப்பு இனிவரும் காலங்களில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு வேலை அவர் அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி விடுவாரா அல்லது வேறு ஏதாவது புதிய கட்சியை தொடங்குவாரா என்று பல்வேறு கேள்விகள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழ தொடங்கி இருக்கிறது.

Next Post

”உணவகங்களில் பில் கட்டும் போது இதை கவனிச்சிருக்கீங்களா”..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Feb 23 , 2023
பொதுவாக உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். சாப்பிட்டு முடித்த பிறகு பில் கட்டும்போது ஜிஎஸ்டி வரியும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், பில் கட்டும் அவசரத்தில் அதையெல்லாம் பார்க்காமல் கட்டணத்தை மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவோம். கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஹோட்டல்களில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது இயல்பான ஒன்றுதான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அனைத்து உணவுகங்களும் ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டியது கிடையாது. […]

You May Like