குஜராத் மாநிலம் சூரத்தில் பெண் ஒருவரை அவருடைய காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளது.
சூரத்தைச் சேர்ந்த நிகுன்ஞ்குமார் அம்ரித்பாய்பட்டேல் என்பவர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அம்ரித்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவது அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரிடம் சண்டை போட்டிருக்கிறார். உன்னால் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். இனி என்னுடைய வாழ்க்கையில் நீ கிடையாது என்று தெரிவித்து அவரிடம் இருந்து விலகிச் சென்றார்.
இது அம்ரித்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் அந்த பெண் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததன் காரணமாக, ஆத்திரம் அடைந்த அந்த நபர், அந்தப் பெண்ணை கேபிள் வயர் கொண்டு கடுமையாக தாக்கி இருக்கிறார். அதோடு அவரை அடித்து கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். அத்தோடு நின்று விடாமல் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடிகளையும் தூவி டார்ச்சர் செய்திருக்கிறார்.
அதன் பிறகு இதனை வெளியே சொன்னால், நாம் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தெரிவித்து மிரட்டி இருக்கிறார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
மிகக் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.