லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கின்ற திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ப்ரோமோ உடன் வெளியானது. விக்ரம் திரைப்படத்திற்கு கமாலை வைத்து எப்படி ப்ரோமோ ஒன்றை லோகேஷ் எடுத்தாரோ அதேபோல லியோ திரைப்படத்திற்கும் செம மாசான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் இதே பாணியை தற்சமயம் சூர்யா தன்னுடைய 42 வது படத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது சூர்யா அவர்களின் 42 வது திரைப்படத்தின் தலைப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட பட குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த ப்ரோமோ வீடியோ வருகின்ற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.