கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குட்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெட்டப்பா (36). இவரது மனைவி ரேணுகா (30). இவர்கள் எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரேணுகாவின் நடத்தையில் சந்தேகப் பட்ட ஜெட்டப்பா கடந்த சில தினங்களாக ரேணுகாவிடம் சண்டை போட்டு வந்தார். நேற்று காலை மறுபடியும் சந்தேகத்தால் ரேணுகாவிடம் சண்டை போட்ட ஜெட்டப்பா ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து ரேணுகாவின் தலையில் வெட்டினார். இதில் ரேணுகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்னர் லிங்கசுகூர் காவல் நிலையத்திற்கு சென்ற ஜெட்டப்பா, ரேணுகாவை கொலை செய்ததை கூறி சரண் அடைந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ரேணுகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராய்ச்சூர்: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குட்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெட்டப்பா (36). இவரது மனைவி ரேணுகா (30). இவர்கள் எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.