தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மலிவான விலைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பொதுமக்களின் நலனுக்காக அவ்வப்போது அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் தான் நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு 4️ லிட்டராக உயர்த்தப்பட்டிருப்பதாக அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். அவர் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவை வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு மண்ணென்ணெயின் அளவை குறைத்ததாக தெரிவித்து, 1 லிட்டர் மண்ணெண்ணெய் இதுவரையில் வழங்கி வந்த நிலையில், இனி 4 லிட்டராக வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மண்ணெண்ணெயின் அளவு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.