fbpx

வெளியானது தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல்…!

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 2.500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கவிருக்கும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதைத்தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

அந்த விளம்பரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும் அந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான வரவேற்பு பாடல் வெளிவந்துள்ளது. இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.,

Rupa

Next Post

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு வெற்றி...! அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா...?

Fri Jul 22 , 2022
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி  வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்கு எண்ணிக்கையில் 64 சதவீதத்துக்கும் அதிகமான செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் […]

You May Like