தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இந்த விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகையுடன் தொடங்குகிறது.
இந்த பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு 1000 ரூபாய் பணம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது பொங்கல் பரிசு தொகப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, கடந்த மூன்றாம் தேதியிலே ஜனவரி மாதம் 8ம் தேதி வருகிறது. காலகட்டத்தில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக நாள்தோறும் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தலா 200 பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் இருக்கின்ற 33,000 ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் 93 சதவீதம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே அன்னை சத்யா நகரில் தொடங்கி வைத்தார்.
அதேநேரம் பல்வேறு காரணங்களை முன்வைத்து டோக்கன் தெரியாத அரசு அட்டைதாரர்கள் வரும் 13ஆம் தேதி அன்று அந்தந்த நியாய விலை கடைகளில் தங்களுடைய ரேஷன் கார்டு எடுத்து வந்து பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கு முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கான டோக்கனை பெற்றுக் கொண்ட நபர்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதாவது முறைகேடு நடைபெற்றால், பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 901 உள்ளிட்ட எண்களிலும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.