காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகத் தொடங்கினர். ஆகவே கர்நாடக மாநில தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் நடப்பாண்டு நீர் வழங்கும் காலத்தில் இதுவரையில் 658 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விடவும் இது 484 டிஎம்சி கூடுதல் நீர் எனவும் கூறியுள்ளார்.
அதேசமயம் பெங்களூரு நகர பகுதிகளில் இருக்கின்ற குடியிருப்புகள் வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வெளிநாட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
அதோடு காவேரி ஆற்றின் ஆங்காங்கே பச்சை நிறத்துடன் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருப்பதாகவும், முறைப்படி கிடைக்கும் நீரில் பெருமளவு கழிவுநீராகவே இருப்பதாகவும் அவர் சாடி இருக்கிறார். ஆகவே காவிரியின் கழிவுநீர் கலப்பதை தடுக்க தேவைப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த கடிதத்தின் மூலமாக கர்நாடக மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்