தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் புதுப்புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்சமயம் நியாய விலை கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலமாக சற்றேற குறைய 1254 கோடி வர்த்தகம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக பொதுமக்களின் வசதிக்காகவும் ஆவின் பொருள்களை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. நியாய விலை கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கான இந்த திட்டம் நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரம் பொதுமக்கள் நியாய விலை கடைகள் மூலமாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி எளிமையான முறையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்து இருக்கிறது.