அதாவது கழிவு நீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் சமயத்தில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். இது தொடர்பாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஆவடி மாநகராட்சி ஆணையர் மற்றும் ஆவடி காவல் துறை துணை ஆணையர் பாஸ்கர், மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் முகமது உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் சமயத்தில் உண்டாகும் மரணத்தின் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக தமிழக ஆளுநரிடம் மனு அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.