fbpx

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு…..! அமைச்சர் வெளியிட்ட அதிரடி பதில்…..!

இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து இருப்பதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன்க்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் சென்னை கிண்டியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் அளவுக்கு தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இதன் காரணமாக, 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஆரம்பித்து 30ஆம் தேதி வரையில் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஒரு வாரம் முன்னதாகவே வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியே முழு ஆண்டு தேர்வு ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே புதுவையில் இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக, 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் 11 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கியிருக்கிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு காய்ச்சல் பரவுவதாக முதல்வரிடம் மருத்துவத் துறை அறிக்கை ஒன்றை வழங்கியதன் அடிப்படையில், விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் இருக்கின்ற பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரையில், தொடர்ந்து 11 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார்.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி அதோடு தனியார் பள்ளிகள் என்று அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்று அமைச்சர் நமச்சிவாயம் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Post

பட்டாசு ஆலை விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதலமைச்சர் உத்தரவு..

Thu Mar 16 , 2023
தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் .. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த, நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் பொல் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.. இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.. இதையடுத்து […]
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் திடீரென கூடும் அமைச்சரவை..! என்ன காரணம்?

You May Like