தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வை சுமார் 9,40,000 மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி இருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் 91.39% மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் அந்த வகையில் 4,30,710 மாணவிகளும்,4,04,904 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே 6.5% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் சுமார் 3,718 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
அதேபோல இந்த தேர்வு முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. அதைப்போல சிவகங்கை 97.53% விருதுநகர் 96. 22% என்று அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றியுள்ளனர்.