fbpx

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதத்தில் நல்ல செய்தி சொன்ன சென்னை வானிலை ஆய்வு மையம்…..!

மாநில முழுவதும் கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயிலில் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தை சற்று குறைக்கும் விதத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த கோடை வெயிலை தணிக்கும் விதமான செய்தியை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் தான் டார்கெட்..!! கொலையில் முடிந்த கொள்ளை சம்பவங்கள்..!!

Tue Apr 25 , 2023
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 12-வது தெருவில் ஸ்ரீராம்- பானுமதி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்ரீராமின் தாயார் சிவகாமி சுந்தரியும் (81) ஒன்றாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி ஸ்ரீராமும், பானுமதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சிவகாமி சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளர். காலையில் பணிக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் மாலை வீடு திரும்பினர். அப்போது அறையில் […]

You May Like