தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றாலே தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
ஆனால் இந்த கோடை வெப்பத்தை தணிக்கும் விதத்தில், அவ்வபோது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. அந்த வகையில், கோடை வெயிலை தணிக்கும் விதத்தில் ஒரு செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதாவது இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை காஞ்சிபுரம், பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை அரியலூர், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளது.