fbpx

தமிழகத்தில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்க போகும் கனமழை…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியின் நிலவி வருகிறது ஆகவே 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரையில் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

அதேபோன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது தேனி ஈரோடு திருநெல்வேலி தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதோடு மே மாதம் 1ம் தேதி விருதுநகர், மதுரை, சேலம், கன்னியாகுமரி, தர்மபுரி, கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 27 லிருந்து 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Next Post

வீட்ல போய் காசு கேட்காத செல்போன் வாங்கி வச்சுக்கோ நைசா பேசி என்ன வேணும்னாலும் பண்ணு……! அதுக்குத்தான் இந்த 1000 ரூபாய் துரைமுருகன் பேச்சால் வெடித்தது சர்ச்சை…….!

Sat Apr 29 , 2023
தமிழகத்தில் தமிழகத்தில் வரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதல் தமிழக தாய்மார்கள் வரையில் வெகுவாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த […]
திடீர் உடல்நலக்குறைவு..!! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!

You May Like