தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் சௌந்தரராஜன். இவர் திடீரென்று மத்திய அரசால் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். ஆகவே அவர் தன்னுடைய கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தெலுங்கானா மாநில ஆளுநராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பிறகு புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த கிரன்பேடி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர் பல பத்திரிகையாளர்களின் சந்திப்பில் நான் எப்போதும் தமிழகத்தின் மகள் என்று பெருமையாக சொல்வதுண்டு.
அந்த வகையில் தமிழ்சைச் சேர்ந்த ரராஜன் சமீபத்தில் கோவைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழக மக்கள் திறமையான நபர்களை அங்கீகரிப்பது இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது மாநிலங்களுக்கு நியமனம் செய்யப்படும் ஆளுநர்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரால் பரிசீலனை செய்யப்பட்டு அதன் பிறகு குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்களால் எங்களைப் போன்ற நபர்களை நாடாளுமன்ற உறுப்பினராக முடியவில்லை. ஆகவே மத்திய அரசு திறமையான நபர்களை அடையாளம் கண்டு கொண்டு ஆளுநராக நியமனம் செய்து எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.
பொதுமக்கள் எங்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்திருந்தால் மத்திய அரசு எங்களை மத்திய அமைச்சராக நியமித்திருக்கும். தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ள முயற்சி செய்யுங்கள். நாங்கள் நிர்வாக திறமை இருப்பவர்கள் மக்கள் திறமையானவர்களை நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.
பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து வருகிறார்கள் ஆகவே அவர்களுக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை சிந்தனை செய்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்புங்கள். நான் ஒரு ஆளுநர் ஆகவே இதுகுறித்து நான் கருத்து கூற இயலாது என்று கூறிவிட்டார் தமிழிசை சௌந்தரராஜன்.