fbpx

தமிழ்நாடு மாநில பட்ஜெட் வரும் 20ஆம் தேதி தாக்கல்……! வெளியாக உள்ள முக்கிய அறிவிப்புகள்……!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்தில் தமிழக அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த விதத்தில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது 2023 24 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்படும் அதன் பிறகு 2023-24 ஆம் வருடத்திற்கான முன்பன மானிய கோரிக்கையும் 2022 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையையும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் மாதம் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்
சபாநாயகர்.

பட்ஜெட் வாசிக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். அதோடு வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் உட்பட அனைத்து அலுவல்களும் அலுவல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நிதிநிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும்? துறை வாரியான நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நிதிநிலை அறிக்கை தாக்களுக்கு பின்னர் மறுநாள் வேளாண் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.அந்த விதத்தில் மார்ச் மாதம் 21ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை மாநில உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

டெல்டா மாவட்டத்தில் திடீர் மழை காரணமாக விவசாயிகள் கவலை…..!

Tue Feb 28 , 2023
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இந்த நிலையில், தமிழகத்தின் நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து […]

You May Like