fbpx

பேசுபொருளாக மாறிய ஆளுநர் மாளிகையின் குடியரசு தின விழா அழைப்பிதழ்….!

தலைநகர் சென்னையில் சென்ற 4ம் தேதி நடைபெற்ற விழா ஒன்று தமிழ்நாடு என்று தெரிவிப்பதை விட தமிழகம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் ரவி பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்காக அனுப்பிய அழைப்பிதழ் மறுபடியும் சர்ச்சையாக வெடித்தது.

ஆளுநர் மாளிகையின் அந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என எழுதுவதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி என குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதிலாக இந்திய அரசின் இலச்சினை இடம் பெற்று இருந்தது. ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல கட்சிகளும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக டி ஆர் பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநரின் போக்குக்கு எதிராக மனு வழங்கினர். இதற்கு பின்னர் டெல்லிக்கு சென்ற ஆளுநர் தரப்பிலிருந்து தமிழ்நாடு பெயர் சர்ச்சை தொடர்பாக விளக்க கடிதமும் வந்தது அதில் தான் தமிழகம் விளக்கம் அளித்தார் ஆளுநர்.

இந்த சூழ்நிலையில், வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாக மாறி உள்ளது. சென்ற ஆண்டு இந்திய அரசின் இலச்சினையும் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை திருவள்ளுவர் ஆண்டு மட்டுமல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Next Post

மனைவியுடன் தனிமையில் இருந்தபோது வீடியோ..!! 50 சவரன் நகை கேட்டு மிரட்டிய கணவர் குடும்பம்..!!

Mon Jan 23 , 2023
உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் டாக்டரை மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் கோனேரிப்பாளையத்தை சேர்ந்தவர் விமல் (31). இவருக்கும் 25 வயதான ஹோமியோபதி பெண் டாக்டருக்கும் கடந்த 2021 செப்டம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விமல் துன்புறுத்தி வந்துள்ளார். அத்துடன் மனைவியிடம் உடலுறவின்போது எடுத்த வீடியோவை பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது. […]

You May Like