fbpx

இலங்கையில் பதற்றம்.. புதிய அதிபரான ரணில் விக்ரமசிங்கே… மீண்டும் அதிபர் செயலகம் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்..!

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார். சிங்கப்பூரிலிருந்தே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் 20-ஆம் தேதியான இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர். இதையடுத்து, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டல்லஸ் அழகப்பெருமா, அனுரா குமார திஸ்சநாயகே ஆகிய மூன்று பேர் களத்தில் இருந்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தன. இந்த நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கை அதிபர் செயலகம் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். ரணில் பதவி விலக வேண்டும் என்று அதிபர் செயலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் .இதனால் அங்கு உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

Baskar

Next Post

எடப்பாடியிடம் அதிமுக தலைமை அலுவலகம்..! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ் தரப்பு..!

Wed Jul 20 , 2022
அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை […]

You May Like