மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சேர்ந்த அஜய் பார்டேகி (25). இவர் வெல்டிங் டெக்னிசியன் ஆக பணிபுரிந்து வந்தார். மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாடாவைச் சேர்ந்த செவிலியரான (23) வயது பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழகி வந்தார் பிறகு இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் அஜய் பார்டேகியும் பெண்ணின் தாயாரை சந்தித்துஅவரது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.
பெண்ணின் தாயார் ஒப்புக்கொண்டதால் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜய் பார்டேகி தனது காதலியுடன் நாக்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென அஜய் துடி துடித்து கிழே விழுந்தார். இதைக் கண்டு ஒன்றும் புரியாத அவரது காதலி லாட்ஜ் அறையில் இருந்து அலறினார், உடனே அங்கு வந்த லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பிறகு மயங்கி கிடந்தா அஜய்யை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஜய் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சயோனர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது பற்றி அவரது காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அஜய் தனது காதலியுடன் நீண்ட நேரம் உல்லாசத்தில் ஈடுபட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாகவும், அதன் விளைவாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் காதலனின் உள்ளுறுப்பு மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர் டாக்டர் ஆனந்த் சஞ்செட்டி, உடலுறவின் போது மாரடைப்பு என்பது எப்பொழுதாவது அரிதாக நடக்கும். ஆனால் சாத்தியமானது. கண்டறியப்படாத கரோனரி தமனி நோய் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும், தற்காலத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது. யாருக்காவது அறியப்படாத கரோனரி தமனி நோய் இருந்தால் உடலுறவு போன்ற நேரங்களில் அவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிச்சயம் இருதய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.