fbpx

10 வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது…..! மாநில கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி….!

புதுச்சேரியில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக, புதுச்சேரி மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முன்னரே இறுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் நேற்று முன்தினம் முடிவடைந்தது இந்த நிலையில் நேற்று ரோடு பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நிறைவு பெற்றனர். ஆகவே புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இது குறித்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது 8ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் நூற்றுக்கும், முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்கள் நூற்றுக்கும் என்று குறிப்பிட்டு தேர்ச்சி அட்டவணையில் குறிப்பிட வேண்டும். 9ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் 35 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வந்தால் தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இதனை அடிப்படையாகக் கொண்டுதான் தேர்ச்சி பட்டியலை தயாரிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோர் விவரங்கள் அடங்கிய பட்டியலை கல்வித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது இயக்குனரகத்தால் கொடுக்கப்பட்ட பள்ளி அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அங்கீகார உத்தரவின் நகலை தனியார் பள்ளிகள் இணைக்க வேண்டும். எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனை எல்லோரும் நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Post

டெல்லி நீதிமன்றத்தில் திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…..! ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி…..!

Fri Apr 21 , 2023
தற்போதயெல்லாம் நீதிமன்றம், காவல் நிலையம் போன்ற இடங்களில் கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சர்வசாதாரணம் என்று ஆகிவிட்டது. அந்த வகையில், டெல்லியில் உள்ள சாகோத் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் உடையில் ஒரு பெண் வருகை தந்தார். அந்த பெண் திடீரென்று நடத்தி துப்பாக்கி சூடு காரணமாக, படுகாயம் அடைந்தார் அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விவகாரம் […]

You May Like