பெங்களூர், காடுகோடி பெலதூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி, சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கவரால் உடல் சுற்றப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது. அவரது உடலை காடுகோடி காவல்துறையினர், மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் பீகாரை சேர்ந்த ஓம்பிரகாஷ் சிங் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் பெங்களூரில் தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஓம்பிரகாஷ் சிங்கின் செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர் யாரிடம் எல்லாம் கடைசியாக பேசியுள்ளார் என சோதனை செய்தனர். அப்போது அவர் விஷால் என்பவரிடம் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. விஷாலும், அவரது மனைவி ரூபியும் பெலதூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தது வந்தனர். இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல்துறையினர் விஷாலிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவரும், அவருடைய மனைவி ரூபியும் சேர்ந்து ஓம்பிரகாஷ் சிங்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரனையில், பீகாரை சேர்ந்த விஷால், தனது மனைவி ரூபியுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது விஷாலுக்கும், ஓம்பிரகாஷ் சிங்கிற்கும் நட்பு உண்டானது. இதனால் விஷால் வீட்டிற்கு ஓம்பிரகாஷ் அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் விஷால் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற ஓம்பிரகாஷ் காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூபியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியயோ எடுத்து ரூபியை மிரட்டி வந்துள்ளார். இதன்பிறகு ரூபிக்கும், ஓம்பிரகாஷ் சிங்கிற்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்ததும் விஷால், ரூபியை கண்டித்துள்ளார். அப்போது வீடியோவை காட்டி, ஓம்பிரகாஷ் மிரட்டுவதால் அவருடன் தொடர்பு வைத்திருப்பதாக இருப்பதாக விஷாலிடம், ரூபி கூறியுள்ளார்.
இதற்கிடையே விஷால், ஓம்பிரகாசிடம் இருந்து ரூ.6 லட்சம் பணம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை கேட்டு ஓம்பிரகாஷ் தொந்தரவு செய்ததால், ஓம் பிரகாஷை கொலை செய்ய விஷாலும், ரூபியும் முடிவு செய்தனர். அதன்படி ஓம்பிரகாசை தங்களது வீட்டிற்கு வரவழைத்தனர். பின்னர் விஷாலும், ரூபியும் சேர்ந்து, அவரை கத்தியால் குத்திக்கொலை செய்து, அவரது உடலை சாக்கடை கால்வாயில் வீசி சென்றுள்ளனர். இவ்வாறு காவல் துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குஞ்சாதேவி என்ற பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.