fbpx

கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நடந்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!

பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள புளிக்கீழ் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (36). இவரது நண்பர் பொடியாடி பகுதியில் குடியிருப்பவர் சந்தோஷ் குமார் (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷ், சந்தோஷ் குமாரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். வாங்கிய பணத்துக்கு வட்டி கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் அசல் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, பணத்தை திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் இழுத்தடித்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓணம் பண்டிகை முடிந்து மறுநாள் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ராஜேஷ் சொல்லியிருந்தார். அதனால் பணத்தை வாங்க சந்தோஷ் குமார், ராஜேஷ் வீட்டுக்கு சென்றார். அப்போது ராஜேஷ் பணத்தை தற்போது தர முடியாது என கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இதை தொடர்ந்து சந்தோஷ்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேசை தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ராஜேஷ் படுகாயம் அடைந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் ராஜேசை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சந்தோஷ்குமாரை புளிக்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை திருவல்லா முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

யூ.டியூப் வியூவுக்காக இளைஞர் செய்த செயல் … போலீஸ் அதிரடியாக கைது செய்தனர்…..

Sun Sep 11 , 2022
கிருஷ்ணகிரி அருகே அதிக வியூவ்ஸ்க்காக இளைஞர் செய்த செயலை அடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது நாகிரெட்டிப் பாளையம் . இந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகனான ஜனார்த்தனன் (22) தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். அதே நேரத்தில் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டும் வருமானம் ஈட்டி வருகின்றார். இந்நிலையில் இவரது யூடியூப் சேனலுக்கு பல […]

You May Like