கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கேஜி ஹள்ளி பகுதியில் உள்ளவர் அர்பாஸ். 17 வயதான அந்த சிறுவன் அந்த இருக்கும் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பியூசி இரண்டாம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரியில் இருந்த அர்பாஸுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் கல்லூரியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது கல்லூரி அருகில் வைத்து அப்பாஸை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
கல்லூரி வாசலில் சாலையில் உயிரிழந்து கிடந்த மாணவர் அர்பாஸ் பற்றி தகவல் அறிந்த கே.ஜி. ஹள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவர் அர்பாஸ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவர் கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் அந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அர்பாஸ் மற்றும் சில மாணவர்களுக்கு இடையே தகராறு நடந்துள்ளது. என்பது தெரிய வந்தது .
எனவே, கல்லூரி விழாவில் சன்டை காரணமாக முன்விரோதத்தில் அர்பாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.