fbpx

பற்றி எரிந்த கல்லூரி மாணவி.. காரணம் தெரியாமல் துடிதுடித்த பெற்றோர்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பவித்ரா (20). இவர் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ கடைசி வருடம் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பவித்ரா மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். எனினும் பவித்ரா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று தனியாக வீட்டில் இருந்த பவித்ரா திடீரென தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றியதில் உடல் கருகி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மகாராஜாகடை, காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் மகாராஜாகடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

5 தேசிய விருதுகளை தட்டிச் சென்ற ’சூரரைப் போற்று’..! சிறந்த நடிகர் சூர்யா..!

Fri Jul 22 , 2022
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த கவுரவம் அவரை தேடி வந்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்ணா […]
8 ஃபிலிம் ஃபேர் விருதுகளை தட்டித் தூக்கிய ’சூரரைப் போற்று’..!! ’மீண்டும் கவனத்தை ஈர்த்த மாறா’

You May Like