fbpx

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம்… முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது, அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற போது அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது.

அதைத்தொடர்ந்து அவர் கடந்த 12-ஆம் தேதி டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர் 14-ஆம் தேதி காவேரி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று 18-ஆம் தேதி ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறகு தலைமைச்செயலகத்துக்கு வந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்தார். சில நாட்களாக தலைமைச்செயலகத்திற்கு வராமல் முகாம் அலுவலகத்தில் இருந்தபடி அரசு வேலைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்தார். இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மற்றும் ஏற்பாடு குறித்தும் , செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rupa

Next Post

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000..! குழப்பங்களை தீர்த்த பின்..! வெளியான முக்கிய தகவல்..!

Fri Jul 22 , 2022
உயர்கல்வி உதவித்தொகை பெற இதுவரை 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம் வழியாக கடந்த 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை 3 லட்சம் […]

You May Like